நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரையில், மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும், இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.