-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதே கடலோர பகுதியில் சந்தேகத்திற்கிடமான மூடைகளில் இருந்து நேற்று குறித்த கஞ்சா மீட்கப்பட்டது.
இதன் போது 69 கிலோ மற்றும் 5 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள 18 கேரள கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை அடுத்து அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.