நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டங்களை இயற்றவுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற 2ஆயிரத்து 500இற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார் .
“கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், கடலோர பகுதிகளில் ஏராளமான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சிலவற்றை தாங்கள் அகற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் .
இந்த முறைகேட்டை இல்லாதொழிக்க தேவையான சட்ட நடவடிக்கையை தாங்கள் எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்