-யாழ் நிருபர்-
கடலுக்கு நேற்று புதன் கிழமை இரவு மீன்பிடிக்க சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த அமலசூரி அன்ரனியூட் (வயது 42) என்ற 5 பெண்பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் உட்பட மூவர் நேற்றிரவு 10.30 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதன்போது குறித்த நபர் மயக்கமடைந்துள்ளார். அவருடன் கூடச் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.