நீர்கொழும்பு ஏத்துகால கடலில் குழுவினருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மெட்டியகனே வேவுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியை நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.