நிலாவெளி கோபாலபுரம் கடற்கரைக்கு வவுனியா நெலுக்குளம் பகுதியில் இருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினரில் இருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பத்திரமாக உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
12, 10, 14 மற்றும் 9 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று பொலிஸ் உயிர்காக்கும் படையினர் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு உடனடியாக கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்