நீர்கொழும்பு ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுகளையுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூவரையும் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.