காலி மாவட்டத்தில் ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜங்கள் கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பாறையில் அமர்ந்திருந்த சிறுவனும் சிறுமியும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுவன் காணாமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலஹந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.