கடற்கரையில் கரையொதுங்கிய 35 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 35 கிலோகிராம் நிறையுடைய  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா 16 பொதிகளில் பொதியிடப்பட்டு வெற்றிலைக்கேணி கடற்கரையில் கரையொதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.