பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் இன்று வியாழக்கிழமை காலை துண்டிக்கப்பட்ட மனித தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலை தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.