ஆராச்சிக்கட்டுவ கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை பிறந்து ஒருநாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கிரிக்கெட் விளையாட வந்த இளைஞர்கள் மற்றும் கடற்கரையில் இருந்த ஒரு குழுவினர் இந்த சிசுவின் சடலம் கடற்கரையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கும் கரையோர பொலிஸாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.