கடமைக்கு வராத நாட்களை வந்ததாக காண்பித்து சம்பளம் பெற்ற தாதிய பரிபாலகர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார வைத்தியசாலை ஒன்றான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகர் ஒருவர் கடமைக்கு வராத நாட்களை வந்ததாக காண்பித்து கொடுப்பனவும் மேலதிக நேரக் கொடுப்பனவும் பெற்றமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வைத்திய சாலையில் கடமையாற்றும் தாதியபரிபாலகர் ஒரு மாதத்தில் பல நாட்கள் வைத்தியசாலைக்கு கடமைக்கு வருவதில்லை.

தாதியபரிபாலகர் கையெழுத்திடும் கொப்பியில் இடைவெளிவிட்டு கையெழுத்துக்கள் இடப்பட்டுள்ள நிலையில் மறுநாள் விடப்பட்ட இடைவெளியில் கையெழுத்திடப்பட்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த வைத்திய சாலையில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிற்றமை குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு தெரிந்தா நடைபெறுகிறது? என்ற கேள்வி எழுகின்றது.

தாதியபரிபாலகர்களுக்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணித்தியாளங்கள் மேலதிக நேரம் வழங்கப்படுவதாக அறியப்படும் நிலையில் ஒரு மணித்தியாலத்திற்கு 450ரூபா வேதனம் மாதச் சம்பளத்திற்கு மேலதிகமாக கிடைக்கிறது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய பரிபாலகரின் செயற்பாடானது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் நிர்வாக முறைகேட்டிலும் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

ஆகவே, குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது வடக்கு சுகாதார துறையில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு வழிவகுக்கும்.