கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை மூலம் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 82 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 02 சந்தேக நபர்களிடம் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 62 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும்பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 128 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள்
590 கிராம் ஹெரோயின்
01 கிலோ 300 கிராம் ஐஸ்
06 கிலோ 330 கிராம் கஞ்சா
4104 கஞ்சா செடிகள்
505 கிராம் மாவா போதைபொருள்
119 மாத்திரைகள்