
கடந்த 24 மணி நேரத்தில் 1422 பேர் கைது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 1422 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் 35 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 03 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேகநபர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
ஹெரோயின் 347 கிராம்
ஐஷ் 827 கிராம்
கஞ்சா 5 கிலோ 475 கிராம்
கஞ்சா செடிகள் 6,691
மாவா 208 கிராம்
போதை மாத்திரைகள் 3,574
