நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இன்று திங்கட்கிழமை காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,229 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் 417 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 86 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 40 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.