
கஞ்சா மீட்பு: சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
கனகாம்பிகைக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது 47 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.