-பதுளை நிருபர்-
பதுளை கல்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விலைமதிப்பற்ற இரண்டு கஜமுத்துகள், மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை கல்கந்த பிரதேசத்தை சேர்ந்த 40, 23, 20 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதுளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 26 போதைப் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்