யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கசிப்புடன் சிறுவன் உட்பட பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 1500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதேவேளை, பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன், அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர்.
கசிப்புடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.