ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த நபர்களை 05 ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News