2025 ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று (15) வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மொத்தம் 14இலட்சத்து 21ஆயிரத்து 745 பயனாளி குடும்பங்களின் கணக்குகளில் 11,275,973,750 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை இன்று முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.