ஒரே பெயரைக் கொண்டுள்ளதால் தன்னுடைய பேஸ்புக் கணக்கை 5 முறை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg) மீது சட்டத்தரணி மார்க் ஸக்கர்பெர்க் என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
கணக்கு முடக்கப்பட்டதால் தனக்கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணி மார்க் ஸக்கர்பெர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் மெட்டா தனது வணிகக் கணக்கை ஐந்து முறையும், தனிப்பட்ட கணக்கை நான்கு முறையும் முடக்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.