காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று புதன் கிழமை உயிரிழந்தது.
பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்திருந்தமை குறிப்பிட தக்கது.