அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
எப்பாவல சந்தரஸ்கம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்று புதன் கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் பணிபுரியும் இடத்திலிருந்து எப்பாவல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த துசித சம்பத் பண்டார (வயது – 24) என்ற இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
தனது சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகோதரன் மற்றும் சகோதரி ஒருவர் தலாவ பிரதேசத்தில் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாகவும் மற்றுமொரு சகோதரன் தோட்டத்திலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.