ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 1,214 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முதலாம் திகதி முதல் அங்கு தொடர்ந்தும் பல நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.
ரிக்டர் அளவுகோலில் 7.6 மெக்னிடியூட்டாக பதிவான நில அதிர்வு காரணமாக இதுவரையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், ஜப்பானில் தொடர்ந்தும் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக அந்த நாட்டில் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.