அநுராதபுரத்தில் அம்பர் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை மற்றும் கலேன்பிடுன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் புஜா நகரில் இருவர் அம்பர் விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒரு கோடி ரூபா பெறுமதியான 902 கிராம் “அம்பர்” கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.