யுக்ரைன் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்படவில்லையென்றால், ரஷ்யா தமது அனைத்து நோக்கங்களையும் அடையும் வகையில் போராடத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
சீனாவில் நடைபெற்ற பாரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில், யுக்ரைனின் ஜனாதிபதி செலென்ஸ்கியை சந்திப்புக்கான சாத்தியத்தை தாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. இருப்பினும் , அதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
செலென்ஸ்கி எப்போதும் மொஸ்கோவுக்கு வந்து தம்மை சந்திக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுக்ரைனின் போர் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் இருந்து இதுவரை தமக்கு எந்தச் செய்தியும் வரவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இன்று யுக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.