இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் படைக்கப்பட்ட லட்டு ஒன்று இந்திய மதிப்பில் ஒன்றே கால் கோடிக்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே லட்டு 65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அதன் விலை இரு மடங்காக உயர்ந்து1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.
அதேபோல் ஐதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு 27 லட்சத்துக்கு ஏலம் போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள பிரபலமான லட்டுவை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.