கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுல்லவத்த மற்றும் ஸ்டேஸ் வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் மற்றைய சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 09 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 23 கிராம் 210 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.