பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
வீரியபுர பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை வீரியபுர பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 65கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டு சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் விசேட அதிரடிப் படையினர் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் இன்றைய தினம் சனிக்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.