ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இளைஞர்கள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த கொழும்பில் வேலை செய்யும் 22 மற்றும் 25 வயது உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 5 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொதிசெய்யப்பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.