மாத்தறை பொல்ஹேனவில் வைத்து ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை முகாமில் கடமையாற்றிய கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுமுறையிலிருந்த இந்த கான்ஸ்டபிள், ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.