தெஹிவளை பன்னலோக மாவத்தையில் 1 கிலோ 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 150 000 ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.