யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்த வேளை திருகோணமலை பகுதிக்கு சென்று போதைப்பொருளினை கைமாற்ற முயன்றபோது யுக்திய நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தே நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.