தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஐஸ்கிரீம் விற்பனை வாகனமானது கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தையில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த போது லொறி ஓட்டுனரின் தூக்க கலக்கத்தினால் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் சாரதியின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த தம்பதியினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தம்பதியின் இரண்டரை வயது குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.