நடிகர் அஜித் குமார் 2025இல் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதை ஒருங்கிணைப்பதற்கு விளம்பரதாரர்களும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் அஜித் குமார் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.