-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் (வயது 42) என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.