மாத்தறை – மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகு ஒன்று காணாமல்போயுள்ளது.
‘இதுரங்கி 1’ என்ற பலநாள் மீன்பிடி படகு ஐந்து மீனவர்களுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 21 ஆம் திகதி முதல் குறித்த படகு காணாமல் போயுள்ளதாக, மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக கடந்த 06ஆம் திகதி அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அதன்பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.