ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றமையால் அப்பகுதியில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளின் விடைத்தாள் திருத்தப்பணிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.