கடந்த பதினொரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏற்றுமதி வருமானம் 9.4 சதவீதமாக குறைந்து, 10,909 மில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.
அத்துடன், ஆடை ஏற்றுமதி வருமானம் 18.9 சதவீதத்தால் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இறப்பர் 9 சதவீதத்தாலும், தென்னை சார்ந்த ஏற்றுமதி பொருட்கள் 16.5 சதவீதத்தாலும், பெற்றோலிய பொருட்கள் 7.8 சதவீதத்தாலும், இரசாயன பொருட்கள் 14.7 சதவீதத்தாலும் குறைவடைந்துள்ளன