2024 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
“வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை” என்ற தொனிப்பொருளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது ஏறாவூர் பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதன் நாளான இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இரு நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டு அதை தொடர்ந்து, அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அரச சேவை சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது
அரச சேவையாளர் தங்களது சேவையினை வினைத்திறன் உள்ளதாகவும், சேவையினை பெற வரும் மக்களுக்கு அசெளகரியம் இன்றி தங்கள் கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
