எல்ல சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்த பெண் 64 வயதுடைய பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
தவறி விழுந்த வெளிநாட்டு பெண்ணை ட்ரோன் கமராக்கள் உதவியுடன் தேடி கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.