இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் காரியாலயத்திற்கு நேற்று புதன் கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்து உரையாடியதுடன், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறப்பை முன்னிட்டு முற்போக்குத் தமிழ் உறவுகள் சார்பாகவும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறப்பு நினைவுப் புத்தகத்தில் தனது இரங்கல் செய்தியை இராஜாங்க அமைச்சர் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.