அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 4 அடி நீளத்தில் உலகிலேயே மிகப்பெரிய எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது எலிகளின் உருவம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக ஓர் அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது அவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவற்றின் அளவு அதிகரித்து வருவதால், வீடுகளுக்குள் நுழைந்து, தங்களுக்கான உணவைத் தேடும் தைரியமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், இந்த எலிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க்கில், மக்கள் 4 அடி நீளமுள்ள எலிகளைப் பார்த்தனர்.இந்த ஊரில் 3 கோடி எலிகள் இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு தகவல் வந்திருந்தது. அதாவது நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இணையாக ஐந்து எலிகள் உள்ளன.