எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலைக்கு மேலதிகமாக மின்சாரக் கட்டணமும் 25 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் பணவீக்கமும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கியூபா, 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது.