எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக செயற்படும் ஒக்டேன் 92 இலக்க பெற்றோலை விநியோகிக்கும் 101 எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் ஓட்டோ டீசலை விநியோகிக்கும் 61 விநியோகஸ்த்தர்களும் 50 சதவீதமான கையிருப்பை கொண்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.










