நாட்டில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதப்படி, 92 ஒக்டன் பெட்ரோல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 348 ரூபாவிற்கும், 95 ஒக்டன் பெட்ரோல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 375 ரூபாவிற்கும், ஒட்டோ டீசல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 308 ரூபாவிற்கும் சுப்பர் டீசல் 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 358 ரூபாவிற்கும் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 226 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.