தெரிவு செய்யப்பட்ட தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை இந்த வாரம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச்சீட்டு அறிமுகம் மற்றும் வாகனம் அல்லாத பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு அறிமுகம் எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.