டீசல் கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது. குறித்த டீசல் தொகை இன்று புதன்கிழமை தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான 1 வருட உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்வரும் 12 -14 ஆம் திகதிகளில் முதலாவது தொகை கிடக்கப்பெறும் என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒரு பெற்றோல் கொள்கலன் மற்றும் ஒரு டீசல் கொள்கலன் ஆகியவற்றிற்கு பகுதியளவு முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
