கடந்த சிறுபோக பயிர்ச்செய்கையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பெரும்போகத்திற்காக எரிபொருளினை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி விவசாயிகளுக்கு உரத்தினை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் 15,000 ரூபாவுக்கு மேலதிகமாக 17,000 ரூபாய் பெறுமதியான எரிபொருள் மானியமாக வழங்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் வறட்சியான காலநிலை காரணமாக 65,000 ஏக்கர் விவசாயக்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.