எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50% வீழ்ச்சி

இந்த வருட பண்டிகைக் காலத்தில் எரிபொருள் பாவனை கணிசமான அளவு குறைந்துள்ளதாக பெற்றோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50% குறைந்துள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.